வில்லியனூர் ராஜகருணாகரன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  வில்லியனூர் ராஜகருணாகரன்
இடம்:  புதுவை
பிறந்த தேதி :  22-Sep-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  30-Jan-2011
பார்த்தவர்கள்:  1488
புள்ளி:  130

என்னைப் பற்றி...

கவிதை இன்பத்திலும் துன்பத்திலும் உற்ற துணை !!!!
நன்றிகளுடன் ....
வீ ஆர் கே
9843798449
dk.kn@hotmail.com

என் படைப்புகள்
வில்லியனூர் ராஜகருணாகரன் செய்திகள்

முண்டாசுக் கவிஞனின்
மூச்செல்லாம் விடுதலை!
உணர்வுகளை உசுப்பி
வீரமதை விதைத்திட்ட
எழுசிக்கவிதைகள்!
புகலிடம் தேடியதால்
புண்ணிய பூமியாகிய
புதுவை மண்ணும்!
தேசிய சிந்தனை
தேர்ந்த நல் குறிக்கோள்!
வீழ்ந்த சமுதாயம்
மீண்டெழக் காரணம்!
அறமும் வீரமும்
மண்ணின் மகத்துவம்!
நின் பாடலில் எங்கும்
மனித சமத்துவம்!
உயிர்களிடத்தில் அன்பு
உயர் மானுடப்பண்பு!
நல்லோர் ஆயுளை
நசுக்கிய காலன்!
கல்லில் செதுக்கிய சிற்பமும்
காலத்தால் பொலிவிழக்கும்!
தமிழால் செதுக்கிய நின் புகழ்
தமிழரின் நெஞ்சில் நிலைக்கும்!
மூச்சிருக்கும் வரை நின் நினைவிருக்கும்
தமிழிருக்கும் வரை
நின் புகழ் ஒலிக்கும்!

மேலும்

வீறுகொண்ட வானம்
ரீங்கார பேய்க்காற்று
இடியும் மின்னலுமாய்
இயற்கையின் சீற்றம்
நிரம்பிய நீர் நிலைகள்
உடைபட்ட நீர்க்கரைகள்
ஊரெங்கும் கும்மிருட்டு
வீடெங்கும் நீர்ப்பரப்பு
மின் கம்பிகளுக்கு
கட்டாய ஓய்வு
அலைபேசியின் உயிரிழப்பு
இணையமும் துண்டிப்பு
நீரின்றி உணவின்றி
பசியும் பரிதவிப்பும்
வீதியெங்கும் மழை வெள்ளம்
வேரருந்த மரங்கள்
உயிரற்ற உடலாய்
மூர்ச்சையான ஊர்திக்குவியல்
வாழ்ந்த வீடும்
வெள்ளமதின் இரையாக
அரசின் படகில்
அகதியான தருணம்
கோரதாண்டவ
புயல் முகம்
முகமறியா
தெய்வங்களின்
உதவிக்கரங்களிலே
மனிதம் மட்டுமே வாழும்!
புதுவையின் வரலாற்றில்
புதியதோர் மழையளவு!
நாளைய ப

மேலும்

நாங்கள் மேடான இலாசுப்பேட்டைப் பகுதியில் வசிப்பதால் புயலின் சீற்றம் தெரிந்தது. ஆனால் நீர் தேங்கவில்லை. கிருஷ்ணா நகர், ரெய்ன்போ நகர் பொன்ற பகுதியில் சூழ்ந்திருந்த செந்நீரைப் படங்களில் பார்த்து அதிர்ச்சி அடைந்ந்து. எங்கள் துன்பம் இரண்டு நாட்கள் மின்சாரம் இல்லை. இன்று திங்கள் (04-11-24) மாலை 06.௦௦ மணியிலிருந்து மின் தொடர்பு உள்ளது. நீர் தேங்கியுள்ள பகுதிகளில் மக்கள் எவ்வளவு துன்பப்படுகிறார்களோ? நினத்துப் பார்க்க முடியவில்லை. 02-Dec-2024 8:39 pm

அன்று நீங்கள் பட்ட துன்பங்களை
இன்று நான் படும் போது உள்ளத்தால் உணர்வதே அப்பா!

மனம்பொங்கும் பாசத்தை
வெளிக்காட்டாமல்
கம்பீர கண்டிப்பால்
மிளிர்பவரே அப்பா!

பொத்தல் பனியனையும்
காதருந்த செருப்பினையும்
தூக்கிப்போட
மனம் வராத
பொறுப்பாளி ஆளுமையே
அப்பா!

பேர் சொல்லும் பிள்ளைகள்
ஊர் மெச்ச வாழ்ந்திட
சுக துக்கத்தை
மறந்த தெய்வமே
அப்பா!

இதயத்தின் ஓரத்தில்
ஊற்றெடுத்து
விழிநீரில்
வழிந்தோடும்
பாசப்பெட்டகமே
அப்பா!

அப்பா...
கவிதையல்ல...அனுபவம்!
எழுத்துக்களில்
அடங்காத
காவியம்!!!!
_ தேவ கருணாகரன்

மேலும்

*மணல் திருட்டு*

நிலமகளின்
சென்னீரும்
கயவர்களின்
உவர்நீரும்
மணல் மலையாய்
பொதியுந்தில்
நிரப்பி....!

மறுவீடு
காண
மகிழுந்தில்
விசும்பும்
மணமகளின்
கண்ணீராய்,
சாலைகளில்
நீர்க்கோலம்....!!

பணத்தாசை
பேய் பிடித்து
அண்டமதின்
கருவறைச்சுரண்டி
கல்லறை எழுப்ப
விழையும்
மானிடா...

கான்கிரீட்
காடுகள்
ஆக்சிஜன்
உமிழுமா?

களர் நிலமதில்
பயிரும் விளையுமா?

உனக்கு மட்டும் சோலைவனம்..
உன் சந்ததிக்கு
பாலை நிலமா?
எண்ணித் திருந்துக!
ஏற்றம் கண்டிட!!
*_வில்லியனூர் தேவ. கருணாகரன்*

மேலும்

பன்முக வித்தகர் பைந்தமிழ்க்கலைஞர்
பாரினில் இவர்போல் நிலைப்பார் அரிது

அரசியல் களத்தில் ஆயிரம் பிரைக்காணும்
அரியதோர் பேறு அடைவோர் யாரோ ?

திரைகடல் ஓடியே திரவியம் தேடிய
திராவிட மைந்தனின் தலைவர் அவரே

சமத்துவம் என்னும் கருத்தினை விதைத்து
சாதியின் வேரினை பொசுக்கிய தீயே

வாலின் கூர்மையை விஞ்சும் வார்த்தையால்
வரலாற்றின் பக்கத்தை நிரப்பிய ஆதவன்

முத்தமிழ் வித்தகர் மூவுலகின் வேந்தர்
முத்தான தமிழுக்கு மாநாடு கண்டவர்

தேசிய அரசியலில் தென்னாட்டின் வலிமை
தெளிவுடன் பறைசாற்றிய கலைஞரின் திறமை

எழுத்தாணி துணை கொண்டு ஏழுலகை ஆளும்
எழிச்சிமிகு உரையால் இதயங்கள் வீழும்

அகவை தொண்

மேலும்

உடலுயிர் உள்ளவரை வேண்டுமே பணம் !
உலகினில் மக்கட்கு நிறையாதே மனம் !!

வேண்டுமென பேராசைக்கொண்டு குவித்த செல்வம்!
வேண்டுமென ஒதுங்கிடினும் வருமே துன்பம்!!

தான்சேர்ந்த பொருள்தனை அழிக்குமே தீ !
தலைக்குமேல் சேர்க்கும் சொத்தால் அழிவாயே நீ!!

பயனறிந்து உபயோகம் நாளும் நன்மையே !
பணமெனும் நெருப்புக்கும் இது உண்மையே !!

தீர்க்கமான வழியதனை தேர்ந்து நடந்திடு !
தீயானாலும் அச்சமின்றி துணிந்து நின்றிடு !!

சிறுபொறிதான் மாமலையில் காட்டுத்தீயாய் !
சிதைந்து நிற்கும் மனம் அதனை கட்டிக்காப்பாய் !!

பக்குவமாய் பயன்கொண்டால் பலன்தருமாம் நெருப்பு !
பணமதனை சீர்த்தூக்கி பார்த்தல் நம் பொறுப்பு

மேலும்

மிக சிறந்த முறையில் எழுதி உள்ளீர்கள்.. 09-Apr-2018 1:34 pm
வில்லியனூர் ராஜகருணாகரன் - முனோபர் உசேன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Feb-2015 6:09 pm

"பாரம் எல்லாம் வலியில்,
காயம் எல்லாம் மனதில்,
எப்படியும் உழைத்து-தான் ஆகவேண்டும்...

"காலையோ, மாலையோ,
இரவோ, பகலோ, வரும் சிற்றுந்து,
இவைகளை நான் எதிர்ப் பார்த்தால்தான் என் பிள்ளைகளுக்கு நண்பகல்-விருந்து"..

"உடம்பில் எத்தனை மூட்டைகளையும் அடுக்குங்கள்
என் பிள்ளையின் பசியை மட்டும் அடைத்தால்-போதும் "

"என் இரு கைகளும் சிவந்துப்-போகும்,
ஆனாலும்
என் மனமோ அதை மறந்துப்-போகும்
என் பிள்ளையின் பசியை உணர்ந்து".

"என் முதுகெலும்பு என்னிடம் சொல்லும்
நான் உடைந்-தாலும்
நீ உருக்குலைந்து விடாதே
பின்பு உன் பிள்ளையின் பச

மேலும்

அருமை !சில இடங்களில் ஒற்றுப் பிழைகள் உள்ளன சரி செய்யவும் ! உணர்ச்சிகள் மிக ஆழமாக உள்ளன ! 13-Oct-2020 1:20 pm
அருமை ... 07-Nov-2017 9:09 am
நன்று .பாராட்டுகள் 06-Jul-2016 4:44 pm
நல்ல வரிகள் அதில் சில வலிகள் உண்மையை உவமையை பாடியதற்கு நன்றி ....... உங்கள் முயற்சி தொடரட்டும் வாழ்க வளர்க .... 20-Aug-2015 12:50 am

போதையிலே ஓட்டுனர்
பாதையிலே விபத்து

சாலையிலே சாகச பயணம்
விபத்தாலே அகால மரணம்

பெற்றோரின் சாலை விழிப்புணர்வு
பிள்ளைகளின் நல்வாழ்வு

பாதசாரிகளின் உதாசீனம்
ஒட்டுனருக்கோ அதிசிரமம்

சாலையிலே அசுரவேகம்
நிச்சயம் நரகலோகம்

ஆட்டோவில் அதிக மழலைகள்
ஆபத்தினை தேடும் வழிகள்

செல்போனில் இனிய அழைப்பு ஒலி
சுற்றத்தார்க்கு இல்லை காதில் வலி

சாலையில் செல்போன் பேச்சு
விபத்தினால் உயிரே போச்சு

அசதிய போக்க கோட்டரா
கண்ணீர் அஞ்சலி போஸ்டரா

விபத்து நடந்துட்டா நூத்தியெட்டு
தூக்கம் வந்துட்டா ஓரம் கட்டு

செல்லுல பேசிட்டு வாகன பயணம்
கவனம் சிதறினா நொடியில் மரணம்

இரவின

மேலும்

சிந்தனை வெகு சிறப்பு தோழரே... தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் மற்றும் உழவர்த்திருநாள் வாழ்த்துக்கள்... 16-Jan-2015 11:59 am
அருமையான எச்சரிக்கை நண்பரே 15-Jan-2015 10:35 pm

மனிதன் மாறினான்
இயற்கை அழிந்தது
நவ நாகரிகம்
பல வண்ண உடை
இயற்கையோ
நிர்வாண கதியில் !!!

துகிலுரித்த
துரியோதனன்
போட்டிக்கு வந்திடினும்
எம் மக்களிடம்
தோற்று போவான் !!!

மேலும்

பரிசு பெற்றவர்கள் வருத்த பட போகிறார்கள் நண்பரே !!!!!!!! 04-Feb-2014 6:48 am
பல்லாயிரம் கவிஞரிங்கு படைக்கின்றார் சொல்லடுக்கு.. பரிசுகளும் பெறுகின்றார்; பாவம்..அது தமிழுக்கே இழுக்கு 03-Feb-2014 11:06 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
Raj Kumar

Raj Kumar

சௌதி அரேபியா
tamilnadu108

tamilnadu108

இந்தியா

இவர் பின்தொடர்பவர்கள் (4)

tamilnadu108

tamilnadu108

இந்தியா
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
Raj Kumar

Raj Kumar

சௌதி அரேபியா

இவரை பின்தொடர்பவர்கள் (4)

tamilnadu108

tamilnadu108

இந்தியா
Raj Kumar

Raj Kumar

சௌதி அரேபியா
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
மேலே